Wednesday 2 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 9 – பேச்சு (வில்லியம் ஸ்டான்லி மெர்வின்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான வில்லியம் ஸ்டான்லி மெர்வினின் (1927 – 2019) “பேச்சு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“வாழ்வின் எல்லா தருணங்களிலும் நாம் மானுடத்தின் கடந்தகாலத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். மானுடத்தின் கடந்த காலம் என்பது முதன்மையாக மொழியே. எனவே, பின்னனியில் இடைவிடாது ஒலிக்கும் கூட்டுக் குரல்களுடனே நாம் வாழ்ந்து வருவதால், இதுவரை பேசப்பட்ட அனைத்து விஷயங்களின் இருப்பையும் கற்பனை செய்வது சாத்தியமானதே ” – செஸ்லா மிலோஷ்


பேச்சு

சொற்களோடு விழித்திருக்கும்

அந்த பின்னிரவில் சன்னமான ஒரு பெருமூச்சொலியை

அருகில் கேட்டேன்

பைன் மரங்களில் சரசரக்கும் இரவின் காற்றுப் போல் அல்லது இருட்டில் கடல் போல்

இதுவரை பேசப்பட்ட

அனைத்து விஷயங்களும் சேர்ந்த எதிரொலி

தன் ஒற்றை அசையை இன்னமும் நெய்துக் கொண்டிருக்கிறது

பூமிக்கும் மௌனத்துக்கும் நடுவே

 

No comments:

Post a Comment