Friday 25 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 15 - விடையருளப்படும் பிரார்த்தனை (அன்னா காமியன்ஸ்கா)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பற்றறுத்தல்” (non attachment) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா காமியன்ஸ்காவின் (1920-1986) “விடையருளப்படும் பிரார்த்தனை” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

o

என் வலைத்தளத்தில் வெளியான கவிதை மொழிபெயர்ப்புத் தொடர் இத்துடன் முடிவு பெறுகிறது. கடைசி கவிதை பிரார்த்தனையாக இருப்பதே இயற்கை. 

o

“அன்னா காமியன்ஸ்கா ஒரு கிறிஸ்தவர். பழைய ஏற்பாட்டோடும் புதிய ஏற்பாட்டோடும் வாழ்க்கையை ஆழமாய் முடிச்சிட்டுக் கொண்டவர். தன் முதிய வயதில் அவர் கூடுதல் அமைதியையும் கடவுள் உருவாக்கிய உலகின் மீதான ஏற்பையும் அடைந்தார். இதை மிக நல்ல கவிதையாய் நான் கருதுகிறேன்” – செஸ்லா மிலோஷ்


விடையருளப்படும் பிரார்த்தனை

கடவுளே என்னை மிகவும் துயரப்படுத்தி
பிறகே மரிக்கச் செய்யுங்கள்

அமைதியின் ஊடே நான் நடந்து மறைய விரும்புகிறேன்
எனக்கு பின்னால் நான் எதையும் விட்டுச் செல்ல வேண்டாம். அச்சத்தைக்கூட

உலகத்தை தொடர்ந்து இயங்கச் செய்யுங்கள்
முன்னர் போலவே கடல், மணலை முத்தமிடட்டும்

புல்வெளி பசுமையுடனே இருக்கட்டும்
தவளைகள் ஒளிந்துக் கொள்ளும்படியும்
யாரோ ஒருவர் முகம் புதைத்து
தன் அன்பை அழுது தீர்க்கும்படியும்

வலி என்பதே இல்லை என்பதுப் போல்
காலை தினத்தை பிரகாசத்துடன் எழச் செய்யுங்கள்

உடன், தேனீ தன் தலையில் மோதும்
ஜன்னல் கண்ணாடிப் போல் என் கவிதையும் தெளிந்திருக்கட்டும்.


No comments:

Post a Comment