Friday 4 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 10 – மீனவன் (ஹீ யாங் ஷூ)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “இடங்கள்” (places) எனும் பிரிவில் சீனக் கவிஞரான ஹீ யாங் ஷூவின் (1007 – 1072) “மீனவன்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“இந்த புத்தகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சீனக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு காரணம், சீனக் கவிதைகளில் உள்ள காட்சித் தன்மையே. ஓவியருக்கும் கையெழுத்துக் கலைஞருக்கும் அணுக்கமான விதத்தில் அவற்றில் காட்சிகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. ‘மீனவன்’ கவிதை உண்மையாகவே ஓர் ஓவியம் போலத்தான் இருக்கிறது. சீனக் கலை சார்ந்த நூல்களில், இந்த கவிதை, தூரிகையால் மொழிபெயர்க்கப்படு பல தடவை ஓவியமாக பிறப்பெடுத்துள்ளது. தூறலும் பனியும், தெளிவான பார்வைக்கு தடையாய் மாறுகின்றன. இதன் மூலம் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் – அவதானிப்பவர்- அங்கே இருக்கிறார் என்பது நமக்கு நினைவூட்டப்படுகிறது” – செஸ்லா மிலோஷ்

மீனவன்

அவன் தூண்டிற் கோலை காற்று அசைக்கிறது.

வைக்கற்புல் தொப்பியும் பச்சை நிற சட்டையும் அணிந்த மீனவன் 

நெடிய நாணற் புதர்களில் மறைந்திருக்கிறான் 

வசந்தகாலத்து மழையில் ரொம்ப தூரம் பார்க்க முடியவில்லை

உடன், நீரில் எழும் பனியும் மலைக் குன்றுகளை மூடியிருக்கிறது


No comments:

Post a Comment