Friday 11 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 12 – மகத்தான சிகரம் (முசோ சொசெகி)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (secret of a thing) எனும் பிரிவில் ஜென் துறவியான ஜப்பானிய கவிஞர் முசோ சொசெகியின் (1275-1351) “மகத்தான சிகரம்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“பல்வேறு மொழி கவிதைகளிலும் , எவ்வளவு தூரத்துக்கு, மலைகள் திரும்ப திரும்ப இடம்பெற்றபடி உள்ளன என்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயம். விவிலியத்திலேயே இது ஆரம்பமாகிவிட்டது. சிந்திப்பதற்குரிய புனித இருப்பாகவே மலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலைகளின் தனித்த இருப்பு, மனித மனதின், உணர்ச்சிகளின் கலைந்து விலகும் தற்காலிக நிலைக்கு எதிரானதாய் உள்ளது” – செஸ்லா மிலோஷ்

மகத்தான சிகரம் 

தன் சொந்த இயல்புனாலேயே
    பிணைந்தோடும் நதிகளுக்கு மேலே
        அது வளர்ந்து நிற்கிறது

உயரமாய் குவிந்துக் கிடக்கும்   
    குப்பைக் கூளம் என்று
        அதை சொல்லாதீர்கள்

முடிவில்லாமல், விடியற்காலை பனியும்
    அந்தி மேகமும்
        தம் நிழல்களை அதன் மேல் வரைகின்றன

நான்கு திசைகளில் இருந்தும் 
    தலையை உயர்த்தி நீங்கள் அதை பார்க்கலாம்
        செங்குத்துச் சரிவும் பசுமையும் வனாந்தரமும் 

No comments:

Post a Comment