செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (secret of a thing) எனும் பிரிவில் ஜென் துறவியான ஜப்பானிய கவிஞர் முசோ சொசெகியின் (1275-1351) “மகத்தான சிகரம்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.
“பல்வேறு மொழி கவிதைகளிலும் , எவ்வளவு தூரத்துக்கு, மலைகள் திரும்ப திரும்ப இடம்பெற்றபடி உள்ளன என்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயம். விவிலியத்திலேயே இது ஆரம்பமாகிவிட்டது. சிந்திப்பதற்குரிய புனித இருப்பாகவே மலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலைகளின் தனித்த இருப்பு, மனித மனதின், உணர்ச்சிகளின் கலைந்து விலகும் தற்காலிக நிலைக்கு எதிரானதாய் உள்ளது” – செஸ்லா மிலோஷ்