Friday 21 July 2023

"திருவருட்செல்வி" - கோவை புத்தக கண்காட்சியில்

 கோவை புத்தக கண்காட்சி இன்று துவங்குகிறது. என்னுடைய சிறுகதை நூலான "திருவருட்செல்வி" விஷ்ணுபுரம் அரங்கில் கிடைக்கும். 

கோவை கண்காட்சியை ஒட்டி அருண்மொழி நங்கை ("பெருந்தேன் நட்பு") , அழகிய மணவாளன் ("நாவலெனும் கலைநிகழ்வு"), அஜிதன் ("அல் கிஸா") ஆகியோரின் நூல்களையும் விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடுகிறது. மூவருக்கும் வாழ்த்துக்கள். 

அஜிதனின் முதல் நாவலான "மைத்ரி" வாசித்திருக்கிறேன். தமிழில் அரிதாகவே வாசிக்கக் கிடைக்கும் exotic தன்மையை வெளிப்படுத்திய ஆக்கம் அது. அருண்மொழி நங்கையின் அனுபவக் கட்டுரையை ஏற்கனவே "சியமந்தகம்" தொகுப்பில் வாசித்திருக்கிறேன். ஜெயமோகனுடனான காதல் மற்றும் திரும்ணத்தை பற்றிய அவரது அனுபவ பதிவு, புனைவுக்கு நிகரான உணர்ச்சி வேகம் கொண்டது. 

செவ்வியல் நாவல்களை அடிப்படையாக வைத்து நாவல் எனும் வடிவத்தை விவரிக்கும்விதமாய் பி.கெ.பாலகிருஷ்ணன்  எழுதிய கட்டுரைகளை அழகிய மணவாளன் மொழிபெயர்த்திருக்கிறார். பெரும்பாலானவற்றை இணையத்தில் வெளியானபோதே வாசித்துள்ளேன். மண்டைக்குள் தீக்குச்சியை உரசி வெளிச்சம் உண்டாக்குபவை பி.கெ.பாலகிருஷ்ணன் எழுத்துக்கள். ஒவ்வொரு கருத்திலும் அவர் மேற்கொள்ளும் பாய்ச்சல் ஆச்சர்யமூட்டுவது. என்னுடைய "இடைவெளியும் தொடர்ச்சியும்" கட்டுரையை அவருடைய கருத்திலிருந்தே விரித்தெடுத்திருப்பேன். அவர் மொழியின் அழகையும் தீவிரத்தையும் நுட்பத்தையும் மொழிபெயர்ப்பின் வாயிலாகவே உணரும்படிக்கு தேர்ச்சியுடன் தமிழுக்கு மாற்றியிருக்கிறார் மணவாளன். 

"கோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை நிகழ்கிறது. கோவை கொடீஷியா மையத்தில் இவ்விழா நிகழும் அரங்கு எண் 219, 220 மற்றும் 221 ஆகியவை விஷ்ணுபுரம் பதிப்பக நூல்களுக்குரிய கடை." ஜெயமோகன் பதிவு

திருவருட்செல்வி நூல் முன்னுரை

No comments:

Post a Comment