செந்தில்
ஜெகன்னாதனின்
சிறுகதைகளை
இணையத்தில்
வாசித்தேன்.
தமிழ்ச் சூழலுக்கு
நன்கு பரிச்சயமான
வடிவத்தையே
இக்கதைகள்
வெளிப்பாட்டில்
தேர்ந்திருக்கின்றன.
பழக்கமானவையாகத்
தோன்றுவதே
இக்கதைகள்
சார்ந்து வாசகரில் எழக்கூடிய
முதல் அபிப்ராயமாகவும் இருக்கலாம்.
பெரும்பாலும்
மனிதர்களை
மையப்படுத்தி
எழுதப்பட்டிருக்கும்
இக்கதைகளில்
சமகாலப் புனைவுக் கூறுகள் அதிகம் இடம் பெறவில்லை.
வரலாற்றுப்
பார்வை, புனைவின் இயங்குமுறை
சார்ந்த நோக்கு, தொன்ம மறுஉருவாக்கம்,
கலாச்சாரத்
தலைகீழாக்கம்,
படிமச் செறிவு, உன்மத்த மனநிலை போன்ற அம்சங்களை
இவற்றில் காண முடிவதில்லை.
தோராயமாகச்
சொன்னால் இவை பரிசோதனைக்
கதைகள் கிடையாது. இதை ஒரு குறைபாடாக
சொல்ல முடியாது. நோக்கமில்லாத
பரிசோதனைகளைவிடவும்
நேரடியாக எழுதப்படும்
கதைகள் –அவை பழைய வடிவில் இருந்தாலும்-
மேலானவை என்பது என் எண்ணம். அந்த வகையில் இவை இயல்பான வடிவில் இருப்பதும்
சாதகமானதே.
எனினும் இக்கதைகள்
அழகியல் ரீதியாகப்
பூரணம் அடையாதிருப்பதனால்
வாசகரில் பாதிப்பு ஏற்படுத்தத்
தவறுவதாகப்
படுகிறது. எனவே அவற்றில் அழகியல் ரீதியாக நான் உணரக்கூடிய
இடைவெளிகளை
முன்வைக்க
விரும்புகிறேன்.
அதற்கு முன்னால் அழகியல் பற்றிய என் வரையறைகளையும்
இலக்கிய அழகியல் வாசகரில் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது
என்பதையும்
சற்று விரிவாகவே
பேச வேண்டும். படைப்பிலக்கிய
வாசிப்பை நான் தொகுத்துப்
புரிந்துகொள்ள
அது ஒரு வாய்ப்பாக
அமையக்கூடும்.
Monday, 20 December 2021
ஆழத்தின் விதிகள்
Saturday, 25 September 2021
அந்த மூன்றாவது கை
இந்த சம்பவத்தை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆன்மத் தேடலில் நம்பிக்கை இருக்கிறதா என்று ஒரு நிகழ்ச்சியில் அசோகமித்திரனிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர் அறுபது வருடமாக ஒரு நல்ல டூத்பேஸ்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; அதுவே கிடைக்கவில்லை என்று பதிலளிக்கிறார். இப்போது எழுதும்போதும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. கூடவே, எவ்வளவு பொருத்தமாக பதில் என்றும் தோன்றுகிறது. சொல்லற்கரிய ஆப்த வாக்கியம் அல்ல அப்பதில். இன்னோர் எழுத்தாளர்கூட அதை சொல்லலாம்தான். ஆனால் இன்னொருவர் சொல்லும்போது மேடை சுவாரஸ்யத்திற்காக மட்டுமே அது உரைக்கப்படுகிறது என்பது உடனடியாக தெரிந்துவிடும். ஆனால் அசோகமித்திரனின் ஆளுமையோடு சேர்கையில் அதுவே இயல்பான பதிலாக -விதூஷனத்தனமற்றதாக- மாறிவிடுகிறது. அவரிடம் நிச்சயம் வேறு பதிலை எதிர்பார்க்க முடியாது என்றும் கருத நேர்கிறது.
Subscribe to:
Posts (Atom)